EXCLUSIVE நீட் தரவரிசை பட்டியலில் குளறுபடி! வெளிமாநிலத்தவர் இடம்பெற்றிருப்பதாக திமுக குற்றச்சாட்டு

News18 Tamil
Updated: July 9, 2019, 10:32 AM IST
EXCLUSIVE நீட் தரவரிசை பட்டியலில் குளறுபடி! வெளிமாநிலத்தவர் இடம்பெற்றிருப்பதாக திமுக குற்றச்சாட்டு
News18 Tamil
Updated: July 9, 2019, 10:32 AM IST
நீட் தரவரிசை பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவு கடந்த ஜூன் 5-ந் தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்களுக்கு தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாணவர்கள் தத்தம் மாநில தரவரிசை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாகவும், போலி இருப்பிடச் சாண்று மூலம் தமிழக பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாக சந்தேகம் எழுவதாக திமுக எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...