தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம்/ பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு ரூ.109,91,52,000/- நிதி ஒப்பளிப்பு வழங்க ஆணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட்டது.
2022-23 ஆம் கல்வி ஆண்டில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட ஒரு இடைநிலை ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ. 12,000/ மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியர் ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.15,000/- மற்றும் ஒரு முதுகலை ஆசிரியருக்கு மதிப்பூதியம் (Honorarium) ரூ.18,000/ என மொத்தம் 14,019 இடைநிலை பட்டதாரி, முதுகலை ஆசிரியைகளுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆகும் செலவினம் ரூ.109,91,52,000/ ரூபாய் (நூற்று ஒன்பது கோடியே தொண்ணூற்றொன்று இலட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் இரண்டு இலட்சம்) மட்டும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை, மாணவ- மாணவிகளின் கல்வி நலன் கருதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப் பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப்படுகிறது.
அவ்வாறு நியமனம் செய்யும்போது ஒருங்கிருணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பின்படி (IFHRMS) அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், IFHRMS-ன்படி நிரப்பப்பட்ட பணியிடங்களைத் தவிர்த்து மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டுமே தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government school, Govt teachers, Salary