பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் செயற்பட அனுமதி அளிக்கும் வரைவு மசோதாவை (new draft regulations on Foreign Higher Educational Institutions (FHEI) ) பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission) வெளியிட்டது. இந்த புதிய வரைவு மசோதா, மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் மற்றும் இதர ஒழுங்குமுறை விவகாரங்களில் பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு தன்னாட்சியை வழங்குவதாக உள்ளது.
இந்த வரைவு மசோதா குறித்து, பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜகதேஷ் குமார், நியூஸ்18 தளத்துக்கு பிரத்தியோக போட்டி அளித்துள்ளார். அதன், விவரங்கள் பின்வருமாறு:
கேள்வி: இந்த வரைவு மசோதா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எதிர்காலத்தில் இந்தியா பெறும் முக்கிய அம்சங்கள் என்ன?
ஜகதேஷ் குமார்: உயர்தர அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிப்பதன் மூலம் இந்திய கல்விமுறைக்கு உயர்மதிப்பு கிடைக்கும். இந்தியாவின் பிற உயர்கல்வி நிறுவனங்களுடன் அயல்நாட்டு கல்வி நிறுவனங்ளை சரிசமர நிலையில் அனுமதிக்கும்போது, ஆரோக்கியமான போட்டி சூழலும், ஒத்துழைப்பும் உருவாகும். உயர்கல்வி தரம் சர்வதேச தரத்திற்கு மேம்படும். இந்தியாவிலேயே தங்கி உலகத்தரம் வாய்ந்த கல்விகற்க விரும்பும் மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் இந்தியா பயனடையும். அதேபோன்று, இந்தியா போன்ற கல்விச் சந்தை அணுகலால் அயல்நாட்டு நிறுவனங்கள் பயனடையும்.
கேள்வி: சேர்க்கை முறை, கல்வி கட்டணம் உள்ளிட்ட விசயங்களில் தன்னாட்சி வழங்க யூஜிசி முடிவெடுத்தது ஏன்?
ஜகதேஷ் குமார்: புதிய தேசிய கல்விக் கொள்கை, அயல்நாட்டு கல்வி நிறுவனங்கள் நுழைவை எளிதாக்கும் வகையியல் சட்டமுறைச் சட்டகம் (Legislative Framework) இயற்ற பரிந்துரை அளித்துள்ளது. மேலும், ஒழுங்குமுறை, ஆளுகை, உள்ளடக்க நெறியங்கள் (regulatory, governance, and content norms) ஆகியவற்றில் அயல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையின்படி , தற்போது வரைவு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
கேள்வி: அயல்நாட்டு நிறுவனங்களிடம் இதன் வரவேற்பு எப்படி உள்ளது?
ஜகதேஷ் குமார்: இதை ஒரு முக்கியமான வாய்ப்பாக அயல்நாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. ஏற்கனவே, ஐரோப்பா கல்வி நிறுவனங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தையில் உள்ளனர். மேலும், பொறியியல் போன்ற துறைகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த தேவைகளை அயல்நாட்டு நிறுவனங்கள் புரிந்து கொள்ளும். பொறியியல் துறை யுஜிசி-ன் கீழ் வருவதால் அனுமதி வழங்கப்படும். விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவத் துறையிலும் ஏற்பாடு செய்யப்படும். இந்திய உயர்கல்வியில் அயல்நாட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என நான் முற்றிலும் உறுதியாக உள்ளேன்.
கேள்வி: அனுமதிக் கொள்கை எப்படி? இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற யுஜிசி அழுத்தம் கொடுக்குமா?
ஜகதேஷ் குமார்: அயல்நாட்டு கல்வி நிறுவனங்களின் அனுமதிக் கொள்கை மற்றும் கல்விக் கட்டணங்களை யுஜிசி கட்டுப்படுத்தாது. முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.இருந்தாலும், திறமையான வசதிகளற்ற மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில், கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
கேள்வி: வரைவு மசோதாவில், பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் தேசத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட கூடாது என்று குறிப்பிட்டுள்ளது பற்றி?
ஜகதேஷ் குமார்: யூஜிசி வழிமுறைகள் சட்டப்பூர்வமான ஆவணமாகும். எனவே, 'தேச நலன்கள்' பற்றி குறிப்பிடுவது இயல்பான ஒன்று. இது, உலகளாவிய நடைமுறை. அதைப் பற்றி, தற்போது பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UGC