ஹோம் /நியூஸ் /கல்வி /

எம்பிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற Chat GPT மென்பொருள்: ”ஆனால் இந்த பிரச்னை இருக்கிறது” - எச்சரித்த பேராசிரியர்!

எம்பிஏ தேர்வில் தேர்ச்சி பெற்ற Chat GPT மென்பொருள்: ”ஆனால் இந்த பிரச்னை இருக்கிறது” - எச்சரித்த பேராசிரியர்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Chat GPT3 Wharton MBA: நாம் கற்பனை செய்துள்ள யதார்த்தைவிட இந்த செயலி பலமடங்கு சக்தியுடையவாக உள்ளது என பல்வேறு ஆய்வறிங்காளர்கள் தெரிவித்து வருகின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

Chat GPT3 Wharton MBA:  2023 தொடக்கத்தில் இருந்து, Chat GPT எனப்படும் ஆன்லைன் மென்பொருள் செயலி உலகின் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. மனிதர்களாகிய நாம், நமது புலணுர்வுகளின் மூலம் பெறும் தகவல்களை அடிப்டையாகக் கொண்டு இந்த உலகை புரிந்து கொள்கிறோம், கட்டமைக்கிறோம். உதாரணமாக, ஒரு பொருளின் (எ.கா: கார் ) நீலம், அகலம், உயரம், எடை உள்ளிட்ட பண்புகளைக்  (தகவல்கள்) கொண்டு அந்த பொருளைப் பற்றிய அறிவை உருவாக்குகிறோம். அதேபோன்று, தான் இந்த  Chat GPT ஆன்லைன் செயலியும்.

இந்த செயலி, இணையத்தில் கொட்டிக் கிடைக்கும்  தகவல்களை  எடுத்துக் கொண்டு, பகுப்பாய்வு செய்யும் அறிவுசார்ந்த வேளைகளில் ஈடுபட்டு வருகிறது. நமது கேள்விகளுக்கு, பதில்களை  ஆகச் சிறந்த வர்ணனையுடன் வாக்கியங்களாக தருகிறது. இன்றைய சமகால பின்னணியில், நாம் கற்பனை செய்துள்ள யதார்த்தைவிட இந்த செயலி பலமடங்கு சக்தியுடையவாக உள்ளது என பல்வேறு ஆய்வறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) படிப்பை வழங்கி வரும் wharton பள்ளியின் பேராசிரியர், Christian Terwiesch இந்த செயலி குறித்த முக்கிய ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளார். எம்பிஏ படிப்பில் செயலாக்க மேலாண்மை (operation Management) என்பது முக்கியப் பாடமாக உள்ளது.  இந்த பாடத்தில், இறுதி ஆண்டுத் தேர்வை Chat GPT3 எழுதி தகுதி பெறுமா? (Would Chat GPT3 Get a Wharton MBA? - கட்டுரைத் தலைப்பு) என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆண்டு வருவாய் 30 லட்சம் அமெரிக்க டாலர் பெற, நிறுவனத்தின் கொள்முதல் தொடங்கி விற்பனை விவரம், இருப்பு நிலைமை என ஒட்டுமொத்த வர்த்தக செயல்பாடுகளை விவரணையாக தெரிவிக்கிறது.

வாக்குச் சாவடியில், வாக்காளர்களாயின் காத்திருப்பு நேரம் தொடர்பான கேள்விக்கு இந்த செயலி அளித்த பதில்.

இதையும் வாசிக்க:  உலகை நடுங்க வைக்கும் Chat GPT.. இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிடுமா?

இந்த தேர்வில் Chat GPT செயல்பாடுகளை குறித்து ஆய்வாளர் தெரிவிக்கையில், " தேர்வில் B to B- என்ற மதிப்பெண் அளவை Chat GPT3 எட்டியுள்ளது. விற்பனை நடைமுறையின் பல்வேறு நிலைகளை உள்ளடக்கிய கேள்விகளுக்கு ஆகச் சிறந்த முறையில் இந்த  பதில் வருகிறது. இருப்பினும், எண் கணக்கில் (Arithmetic Calculation) இந்த செயல்பாடுகள் போதுமானதாக இல்லை. முக்கியமாக, இந்த செயலி தனது முந்தைய தவறுதல்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறது.   வணிக மேலாண்மையில் இந்த செயலி  முக்கியத்துவமான மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.  

First published:

Tags: Education