எம்பிபிஎஸ் அட்மிஷன்: வெளிமாநில மாணவர்களுக்கு சீட் வழங்கப்படாது- தமிழக அரசு

மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை "கண்கொத்தி பாம்பை" போல கூர்ந்து கவனத்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எம்பிபிஎஸ் அட்மிஷன்: வெளிமாநில மாணவர்களுக்கு சீட் வழங்கப்படாது- தமிழக அரசு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 11, 2019, 6:16 AM IST
  • Share this:
தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர் யாருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படாது என்றும், போலி சான்றிதழ் சமர்பிக்கும் மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பாயும் என்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. இந்நிலையில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் தமிழக கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் அரசு ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்ற வெளி மாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்க கூடாது என சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.


அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை "கண்கொத்தி பாம்பை" போல கூர்ந்து கவனத்து வருகிறோம். இதுவரை பெறப்பட்ட 39 ஆயிரத்து 13 விண்ணப்பங்களில் தீவிர கண்காணிப்புகளுக்கு பிறகு 3,516 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தனியாக குழு அமைத்து விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், மாணவரின் பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழ், மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோர்களின் சாதி சான்றிதழ், நியாயவிலை அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்படுவதாகவும், அதனோடு சேர்த்து மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்து பெறப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த பிரமாண பத்திரத்தில், மாணவரின் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சமர்பிக்கப்பட்டடுள்ள சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை, அதில் ஏதாவது தவறு இருந்தால் மாணவரைத் தகுதி நீக்கம் செய்யலாம், குற்ற வழக்கு தொடரலாம் அதற்கு சம்மதிகிறேன் என உறுதி கூறும் வாசகம் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.Also see:

First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்