ஹோம் /நியூஸ் /கல்வி /

சீட்டுகட்டு தொடர்பான பகுதிகள் கணித புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை

சீட்டுகட்டு தொடர்பான பகுதிகள் கணித புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை

காட்சிப் படம்

காட்சிப் படம்

எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அப்பாடப்ப்குதியை நீக்க முடிவெடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

சீட்டுகட்டு தொடர்பான பகுதி கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

ரம்மி சீட்டு விளையாட்டினை உதாரணமாக காட்டி 6ம் வகுப்பு 3 ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில் .. முழுக்கள் என்கிற தலைப்பில் பாடம் உள்ளது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது

ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்ய அரசு முயற்சித்து வரும் நிலையில் தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் சீட்டு விளையாட்டினை உதாரணமாக வைக்கப்பட்டுள்ளது சர்சைக்கு வித்திட்டுள்ளது.

இதுகுறித்து எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அப்பாடப்பகுதியை நீக்க முடிவெடுத்துள்ளது..

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இப்பாடப்பகுதி 6 ம் வகுப்பில் இடம்பெற்றது. பூஜ்யம்,குறை எண்கள்,மிகை எண்கள் ஆகியவற்றின் தொகுப்பு முழுக்களை உருவாக்கும் என்கிற கணித முறையை விளக்குவதற்காக இப்பாடம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Online rummy