நேரடி இரண்டாமாண்டு பி.இ, பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பத்தில் இன்று முதல் தொடங்குகிறது.
எனவே, தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்.சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப் படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிரிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய:
ஆரம்ப நாள் : 24.06.2022
இறுதி நாள் : 23.07.2022
பதிவுக் கட்டணம் : இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.300 ஆகும். விண்ணப்பதாரர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம் ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்
இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள், "The Secretary, Second year B.E./B.Tech, Degree Admissions – 2022-23, ACGCET, Karaikudi” payable at Karaikudi” என்ற பெயரில் 24.06.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாகத் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (Tamilnadu Facilitation centre - TFC ) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்க: மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இந்த கல்வியாண்டில் இரண்டாமாண்டு பி.இ., பி.டெக் (Second Year B.E./B.Tech) பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
இதையும் வாசிக்க: தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடுப் பயனாளர்களின் பட்டியல் வெளியீடு: பட்டியலில் இல்லாத மாணவர்கள் மேல்முறையீடு செய்யலாம்
மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in இணையதள முகவரியில் "INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES" பக்கத்தில் பார்க்கவும்.
தொடர்பு எண் : 04565-230801, 04565-224528.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, College Admission