• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஆன்லைன் விளையாட்டுக்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது - மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்

ஆன்லைன் விளையாட்டுக்கு மாணவர்கள் அடிமையாகக் கூடாது - மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மாணவர்கள் அடிமையாகின்றனர், அவற்றை அனுமதிக்காமல் இருக்க மாணவர்களுக்கு பெற்றோர்கள் , ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளை அதிகளவு விளையாடுவதுடன் விளையாட்டுகளுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர் என்று மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது அதன் காரணமாக மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ள மத்திய கல்வி அமைச்சகம், பெற்றோர் அனுமதி இல்லாமல் மொபைல் போன்களில் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை அனுமதிக்க கூடாது, மாணவர்கள் நேரடியாக விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

    ALSO READ |  2020-ம் ஆண்டு குடிமைப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

    தொடர்ச்சியாக ஆன்லைன் வழியிலான விளையாட்டுகளை விளையாடும் போது உடல் மற்றும் மனதளவில். ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர்களிடையே பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அதன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: