Home /News /education /

ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை.. எழுத்து மூலமாக தான் பொது தேர்வு - சிபிஎஸ்இ இயக்குநர்

ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை.. எழுத்து மூலமாக தான் பொது தேர்வு - சிபிஎஸ்இ இயக்குநர்

சி.பி.எஸ்.இ

சி.பி.எஸ்.இ

பத்து மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள், எழுத்துப்பூர்வமாக தான் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அமைப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்த முடியாத சூழல் நாடெங்கும் உருவானது. இந்நிலையில் ஆன்லைன் வழியாக சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவுள்ளதாக செய்தி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

    பத்து மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள், எழுத்துப்பூர்வமாக தான் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா இரண்டாவது அலை வீசி வரும் சூழலில், சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் பரவியது.

    Also read: கடலூர் மாவட்டத்தில் அரசு வேலை காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க ரெடியா?

    இதுகுறித்து பேசிய சி.பி.எஸ்.இ. கல்வி பிரிவு இயக்குநர் ஜோசப் இம்மானுவேல், ஆன்லைன் வழியாக பொது தேர்வுகள் நடத்துவது சாத்தியமில்லை எனவும், ஏராளமான மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வில் கலந்துகொள்ளும் வசதியில்லை என்று கூறினார். இதனால் திட்டமிட்டபடி வழக்கம்போல் எழுத்துப்பூர்வமாக தான் தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: CBSE

    அடுத்த செய்தி