ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு: பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம்

பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டுக்கும் விண்ணப்பிக்கும் மாணவர், மருத்துவ கலந்தாய்வு துவங்குவதற்கு முன்னர் பொறியியல் கலந்தாய்விலும் பங்கேற்று பொறியியல் இடங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது.

ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு: பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம்
பொறியியல் கலந்தாய்வு
  • News18
  • Last Updated: July 5, 2019, 11:05 PM IST
  • Share this:
ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தும்போதே, விரும்பும் கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநகரம் தெரிவித்துள்ளது.

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. முதல் சுற்று மாணவர்கள் 7-ம் தேதி வரை பதிவு கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பதிவு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கான தேதி தள்ளிப்போவதன் காரணமாக இந்த முடிவை எடுத்து இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பொறியியல் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டுக்கும் விண்ணப்பிக்கும் மாணவர், மருத்துவ கலந்தாய்வு துவங்குவதற்கு முன்னர் பொறியியல் கலந்தாய்விலும் பங்கேற்று பொறியியல் இடங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் அதே மாணவர், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து செல்லும்போது அந்த மாணவர் தேர்வு செய்த பொறியல் கல்லூரிக்கான இடத்தை வேறு மாணவருக்கு ஒதுக்க இயலாது.

இதனால், அந்த பொறியியல் இடம் காலியாகவே இருக்கும் என்பதால் பதிவு கட்டணம் செலுத்தும்போதே இடங்களையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.Also watch: அரசு மருத்துவமனையில் நிர்வாண நிலையில் குடிநீர் கேட்டு கதறிய நோயாளி! கண்கலங்க வைத்த காட்சி

First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading