பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீட்டில் சிக்கல் - பொறியியல் கலந்தாய்வு தாமதம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் காரணமாக பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. 

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீட்டில் சிக்கல் - பொறியியல் கலந்தாய்வு தாமதம்
பொறியியல் கலந்தாய்வு. (கோப்புப் படம்)
  • Share this:
கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க்கும் மாணவர்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.

இதற்காக தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் உயர்கல்வித் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் 3-வது வாரத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் மே மாதத்தில்  பொறியியல் கலந்தாய்விற்கான ஆன்லைன் பதிவு துவங்கும்.

பதிவு செய்வதற்கு  மாணவர்களுக்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி காலதாமதமாக துவங்கி முடிவடைந்து தற்போது பொதுத்தேர்வு முடிவுகளும்  வெளிடுவதற்கு  தயாராக உள்ளது.


ஜூலை முதல் வாரத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 12ம் வகுப்பு இறுதி நாள் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டியது இருப்பதால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது.

 இதன் காரணமாக பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்விற்கு பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்ப்பட்டுள்ள காலதாமதத்தால் ஆன்லைன் பதிவுக்கான பணிகள் துவங்கப்படவில்லை என்று கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது .

Also see... NEET, JEE தேர்வுகள் எப்போது ? அறிக்கை சமர்ப்பிக்க வல்லுநர் குழுவுக்கு உத்தரவு

வரும் 15-ம் தேதி வரை ஊரடங்கால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உடனடியாக 12ம் வகுப்பு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. இதன்காரணமாக முடிவுகள் வெளியாவதில் மேலும் காலதாமதம் ஏற்ப்படுவதுடன் ஆன்லைன் கலந்தாய்விற்கு பதிவு செய்வதற்கான தேதி மேலும் தள்ளிபோகும்  சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading