ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 159 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை , இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்புள்ள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் வசிக்கும் மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணம் கூறி, ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஆரணியில் பைக்கில் சென்றவர்கள் மீது மிளகாய் பொடி துாவி கத்தியால் குத்தியவர்களுக்கு வலைவீச்சு
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Minister sengottayan, Online