• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் - பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உத்தரவு

இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் - பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உத்தரவு

ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பு

முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் நீங்கலாக, மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்.

  • Share this:
    தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்த சூழலில் அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்றுமுதல் தொடங்குகின்றன.

    இந்த அறிவிப்பு முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் நீங்கலாக, மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் கல்லூரிகளுக்கு நேரில் வர உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டால், மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    அதில், போலி மதிப்பெண் சான்றிதழ் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை பெறவும், விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    Must Read : 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி

    இதற்கிடையில், தமிழகத்தில் அரசுக்கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 20ஆயிரம் இடங்களில் சேர, இதுவரை 2 லட்சத்து 80ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tngasa.in என்கிற இணையதளத்தில் ஆகஸ்ட் 10 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மொத்தம் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான சேர்க்கைக்கு இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: