ஹோம் /நியூஸ் /கல்வி /

பொங்கல் விடுமுறைக்கு பின் 10 - 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?

பொங்கல் விடுமுறைக்கு பின் 10 - 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Online Class | 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்ப நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்ப நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

  கொரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கும்படியும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துபடியும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  மழலையர் வகுப்புகள் மற்றும் 1 முதல் 9 வரை நேரடி வகுப்புகளுக்கு அனுமதி கிடையாது என்றும், 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  Also Read : மகாபலிபுரத்தில் மீட்கப்பட்ட பத்து தலை ராவணன் சிலைக்கு பின் இருக்கும் ஆச்சரியம்

  இந்நிலையில் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து பொங்கல் விடுமுறைக்கு 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு குறித்து பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Online class