அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் - தேதி அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்

Online Class | அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஜுலை 13 முதல் ஆன்லைன் வழி வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் - தேதி அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்
கோப்பு படம்
  • News18
  • Last Updated: July 8, 2020, 10:50 AM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தேர்வுகள் மற்றும் வகுப்புகள் தடைபட்டுள்ள நிலையில், ஆன்லைன் வழியில் வகுப்புகள் எடுப்பது ஓரளவு கைகொடுத்துள்ளன.

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி செயல்படுத்தி வரும் நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஜுலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


மேலும், 12-ம் வகுப்பு மறுதேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்காக மறுதேர்வு தேதியும் இன்று அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஆன்லைன் வழி வகுப்புகளை பெறக்கூடிய வகையில் அனைத்து மாணவர்களிடம் ஸ்மார்ட்போன், இணையவசதி உள்ளிட்ட கட்டமைப்பு இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading