கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடபிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022 - 23ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாட பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று துவங்கி வைத்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2022 - 23 ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாட பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை இன்று துவங்குகின்றது எனவும் , இன்று மாலை 5 மணி முதல் இணைய தளம் செயல்பட துவங்கும் எனவும் தெரிவித்தார்.
இன்று மாலை 5 மணி முதல் அடுத்த மாதம் 27.7.22ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவித்தார். பல்கலை கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2148 இடங்களும்,28 இணைப்பு கல்லூரிகளில் 2337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் பாடபிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு , இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடபிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
12 இளமறிவியல் பாடபிரிவுகளில் 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், ஓரே விண்ணப்பத்தில் விருப்ப பாடபிரிவுகளை தேர்வு செய்ய முடியும் எனவும், ஓரே நபர் ஒவ்வொரு பாட பிரிவிற்கும் தனிதனியாக விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் தெரிவித்தார். மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விபரங்களுக்கு www.tnau.ac.in என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்துக்கொள்ளலாம் எனவும் இது தவிர பிரத்யேக எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ALSO READ | ரூ.1000 வழங்கும் திட்டம் விண்ணப்பம் செய்வதில் புதிய சிக்கல்... மாணவிகள் அவதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Online application