Home /News /education /

ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாயம் பணி... 7 மாவட்டங்களில் அமல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

ஆசிரியர்களுக்கு மலைப்பகுதியில் ஓராண்டு கட்டாயம் பணி... 7 மாவட்டங்களில் அமல் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்

    தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி,சேலம்,வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் (education backward blocks) பணியாற்றும் ஆசிரியர் மலைக்கு கீழ் பகுதியில் உள்ள சமவெளியில் பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால் மலையின் மேல் பகுதிக்கு சென்று பணிபுரிய விரும்புவதில்லை. இந்த நிலையில் மலையின் மேல் பகுதியிலும் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் மலை சுழற்சிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை திருத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், மலைப்பாங்கான இடங்களில் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் மலைப் பகுதியில் பணிபுரிய தயங்குவதால், குறைந்தது ஒராண்டு பணிபுரிய வேண்டும்.

    இதையும் வாசிக்க:   சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு

    சுழற்சி முறையில் அந்த ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்கள் மலைப்பகுதிகளில் பணியாற்றுவது முழுமை பெறும் வரை மலைப்பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தபடுவார்கள் எனவும் அந்த ஒன்றியத்தில் பணியில் உள்ள அனைவரும் மலையில் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு பணியிடங்களில் காலியிடங்களை முதலில் மலைப் பகுதிக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Children education

    அடுத்த செய்தி