முகப்பு /செய்தி /கல்வி / தமிழகத்தில் பள்ளிகளை ஒரு வாரத்திற்கு மூடிபோராட்டம் அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளை ஒரு வாரத்திற்கு மூடிபோராட்டம் அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tamil Nadu School Strike | தமிழகம் முழுவதும் உள்ளி தனியார் பள்ளிகள் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடைபெற உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துள்ள நிலையில் பிரைமரி முதல் அனைத்து வகையான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடியாக வகுப்புகள் என்பதால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் 75 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது நேரடி வகுப்புகள் என்பதால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் பெறப்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

Also Read : ஆர்.டி.இ மூலம் தனியார் பள்ளியில் இலவச கல்வி - ஏப்ரல் 20 முதல் இணையவழியில் விண்ணப்பிக்காலம்

இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடைபெற உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்கும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் குறைவாக நிர்ணயக்கப்பட்டுள்ளதாக குற்ற்சாட்டினை வைத்துள்ளார்.

தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை 25 சதவிதம் குறைத்துள்ளனர். குறைவான கட்டணத்தை வைத்து கொண்டு பள்ளியை நடத்த முடியாது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

யூகேஜி படிக்கும் மாணவனுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1000 என்றும் அதிகபட்சம் ரூ.4,000 கட்டணம் வசூலிக்க தெரிவித்துள்ளனர். 12-ம் வகுப்பு மாணவனுக்கு ரூ.10,000 வாங்க சொல்கின்றனர். எப்படி பாடம் நடத்தி பள்ளிகூடத்தையும் இயக்க முடியும் என்று தனியார் பள்ளி சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.  மேலும் தனியார் பள்ளிகள் 28 வகை வரி கட்டுவதை யாரும் கணக்கில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Private schools, School