ஆண்டுதோறும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய அந்த நாட்களுக்கு பெயர்தான், அக்னி நட்சத்திரம். இந்த ஆண்டுக்கான கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.
இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில், வெயில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரிக்கும். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அப்போது, மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து, நேரடியாக தேர்விற்கு வரவழைக்கலாமா எனபது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Must Read : சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூ-டியூபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் போராட்டம்..
இந்நிலையில், இன்று மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.