ஹோம் /நியூஸ் /கல்வி /

மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி... பள்ளிக்கல்வி ஆணையர் சூப்பர் முடிவு

மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி... பள்ளிக்கல்வி ஆணையர் சூப்பர் முடிவு

பள்ளி விடுமுறை

பள்ளி விடுமுறை

செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கொரோன 2-வது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டுமுறைகளின்படி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பொதுவிடுமுறையை தொடர்ந்து வரும் சனிக்கிழமை (அக்டோபர் 16) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும் கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16.10.2021 அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் பரீசிலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Also Read : காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனிடையே நவம்பர் 1 ஆம் தேதி, 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் குறித்தும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்தாண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை. டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

First published: