NTSE தேர்வு ஒரு வாரம் ஒத்திவைப்பு.. தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள அனுமதி..

NTSE தேர்வு ஒரு வாரம் ஒத்திவைப்பு.. தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள அனுமதி..

கோப்புப் படம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள stage II, NTSE தேர்வை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ள NCERT, மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

  • Share this:
2019 -20-ஆம் ஆண்டுக்கான Stage II, NTSE தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தேர்வை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ள NCERT, 2021-ஆம் ஆண்டு  பிப்ரவரி 14ம் தேதியன்று NTSE தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. இதனால், மாணவர்கள், தங்களுக்கு தேவைப்பட்டால் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை மாற்றிகொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.  

தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கான விளக்கம் கொடுத்துள்ள NCERT, இயற்பியல் மற்றும் பயாலஜிக்கான Indian Olympiad Qualifier தேர்வும் 2021 பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுவதாக கூறியுள்ளது. அதே தேதியில் Stage II, NTSE தேர்வும் நடத்தப்பட்டால் IOQ தேர்வில் சிலர் பங்கேற்க முடியாத சூழல் உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தேர்வு அட்டவணை மாற்றப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. தற்போது, இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

தேர்வு மையங்கள் மாற்றுவது குறித்து புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ள NCERT, Stage I, NTSE தேர்வை எந்த மையங்களில் மாணவர்கள் எழுதினார்களோ, அதே மையங்களை Stage II, NTSE தேர்வுக்கும் ஒதுக்கியுள்ளது. ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக, மாணவர்கள் வேறு இடங்களுக்கு மாறியிருக்க வாய்ப்புள்ளதால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதமுடியாத சூழல் உருவாகும். 

இதனை கருத்தில்கொண்டு மாணவர்கள் தங்களுக்கு வசதியான பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை தேர்தெடுத்துக்கொள்ளலாம் என NCERT கூறியுள்ளது. ஆனால், ஒரு பகுதியில் இருக்கும் வேறு தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள முடியாது என கூறியுள்ள NCERT, வெவ்வேறு ஊர்களில் இருக்கும் தேர்வு மையங்களை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க...வேலூரில் போலி பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம்.. மத்திய மாநில அரசுகளுக்கு நஷ்டம்..

மேலும், தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள் தங்களின் கோரிக்கை விண்ணப்பத்தை ntsexam.ncert@nic.in என்ற இமெயிலுக்கு டிசம்பர் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு மையம் மாற்றுவதற்கான விண்ணப்பமும் NCERT இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், யார் யாரெல்லாம் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும், மாற்றிக்கொள்ளக் கூடிய தேர்வு மையங்களின் பெயர் பட்டியலும் தெளிவாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. NCERT -யின் இந்த புதிய அறிவிப்பு சொந்த ஊர்களுக்கு திரும்பிய மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: