Home /News /education /

CUET- UG: கியூட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக் கேள்விகள் வெளியீடு

CUET- UG: கியூட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக் கேள்விகள் வெளியீடு

மாதிரி படம்

மாதிரி படம்

இதனை மாதிரித் தேர்வாக கருதிட முடியாது. இதனைக் கொண்டு, வரவிருக்கும் எழுத்துத்  தேர்வின் தன்மையும், சிரமங்களையும் கணக்கிட வேண்டாம்.

    இளநிலை படிப்புகளுக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (CUET- UG) கலந்து கொள்வோர் பயன்பெறும் ஏதுவாக பயிற்சி கேள்விகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    2022-23 கல்வியாண்டுக்கான, இளங்கலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 15, 16, 19, 20 ஆகிய நாட்களிலும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6, 7, 8, 10 ஆகிய நாட்களிலும் கணினி அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 554 நகரங்களில் அமைந்துள்ள மையங்களிலும், அயல்நாட்டில் 15 நகரங்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. 

    மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு முதன் முறையாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த பயிற்சி கேள்விகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    இதையும் வாசிக்க:  Neet exam: நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு எப்போது வெளியாகும்? 

    http://203.122.47.147:8094/online/ என்ற இணைப்பின் மூலம் பயிற்சிக் கேள்விகளை அணுகலாம்.

    பயிற்சி கேள்விகள் தொடர்பான நிபந்தனைகள்: 

    வரவிருக்கும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் தோன்றும் விண்ணப்பதாரர்களின் பயிற்சிக்கானவை மட்டுமே.

    இதனை மாதிரித் தேர்வாக கருதிட முடியாது. இதனைக் கொண்டு, வரவிருக்கும் எழுத்துத்  தேர்வின் தன்மையும், சிரமங்களையும் கணக்கிட வேண்டாம்.

    எந்ததெந்த தலைப்புகளில் அதிக கேள்விகள் இடம்பெறும்? எதற்கு அதிக முக்கியதத்துவம்  கொடுக்கப்படுகுறது? முக்கிய அம்சங்கள் நிறைந்த பகுதிகள்? போன்றவைகளை கணக்கிட வேண்டாம்.

     இதையும் வாசிக்க:  11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது: ரிசல்ட்டை எப்படி தெரிந்துகொள்வது 

    இதில் இடம்பெற்றுள்ள சில கேள்விகள் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படாமல் இருக்கலாம்.

    தேசிய தேர்வு முகமையின் https://cuet.samarth.ac.in/ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் படி தேர்வுக்கு தயாராகுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    தேசிய தேர்வு முகமையின் https://cuet.samarth.ac.in/ல் வெளியாகும் வெளியாகும் தகவல்களை மட்டும் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Entrance Exam

    அடுத்த செய்தி