Home /News /education /

சிஎஸ்ஐஆர்- யுஜிசி நெட் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

சிஎஸ்ஐஆர்- யுஜிசி நெட் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு

சிஎஸ்ஐஆர்- யூஜிசி நெட் தேர்வு

சிஎஸ்ஐஆர்- யூஜிசி நெட் தேர்வு

தேர்வர்கள் அவ்வப்போது தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இனையதளத்தை  https://csirnet.nta.nic.in/, https://nta.ac.in/  பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    CSIR-UGC NET June 2022 Exams:  சிஎஸ்ஐஆர், யுஜிசி ஆகியவை இணைந்து நடத்தும் தேசிய தகுதித் தேர்வுக்கான (CSIR-UGC NET) கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட அறிவியல் பாடநெறிகளுக்கு, இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (சிஎஸ்ஐஆர்) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

    2022 கல்வியாண்டிற்கான சிஎஸ்ஐஆர்- யுஜிசி நெட் தேர்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அறிவிக்கையில்,  செப்டம்பர் 16- 19 ஆகிய நாட்களில் தேர்வு நடத்தப்பட முடிவெடுக்கப் பட்டுளளதாகவும் தெரிவித்தது.

    இந்நிலையில், விரிவான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.



    நுழைவுச் சீட்டு (Admit card), தேர்வு மையங்கள் குறித்த விவரச்சீட்டு (City Intimation Slip) வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி தேசிய தேர்வு முகமையின்  அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்படும்.

    தேர்வர்கள் அவ்வப்போது தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை  https://csirnet.nta.nic.in/, https://nta.ac.in/  பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இதையும் வாசிக்கCUET தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய அறிவிப்பு

    மேலும், தெளிவுரை வேண்டுவோர் 011-40759000, 011-69227700. என்ற தொலைபேசி எண்களையும், csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: UGC

    அடுத்த செய்தி