Home /News /education /

யுஜிசி நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது

யுஜிசி நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது

யூஜிசி நெட் தேர்வு

யூஜிசி நெட் தேர்வு

செப்டமபர் 23 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெற உள்ள  மூன்றாவது கட்ட தேர்வுக்கான கால அட்டவணையையும் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    UGC NET Exam Admit Cards Released: இரண்டாவது கட்ட யூஜிசி-நெட் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் மூன்றாவது கட்ட  தேர்வுக்கான கால அட்டவணையை  தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யூஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    இருப்பினும், கொரோனா நோய்த் தொற்று காரணமாக நடத்தப்படாத 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் தேர்வுடன் ஒருங்கிணைத்து கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி, முதல் கட்டத் தேர்வு ஜுலை மாதம் 08, 09, 11, 12 ஆகிய நாட்களில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. அரசியல் அறிவு, மராத்தி, சீனம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 பாடநெறிகளுக்கு, நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    இரண்டாம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 12,13,14 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களினால் செப்டம்பர் 20,21,22 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டாம் கட்ட தேர்வில் பெண் உரிமை, ஒப்பியியல் இலக்கியம், குஜராத்தி, மணிப்பூரி, அரேபிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய ஆய்வு உள்ளிட்ட பாடநெறிகளில் மாணவர்கள் கலந்து கொள்கின்ற்னர்.

    இந்த, இரண்டாவது கட்ட தேர்வுக்கான அனுமதிச் சீட்டை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் பதிவு எண், பிறந்த தேதி விவரங்களை சமர்ப்பித்து அனுமதிச் சீட்டை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



    மேலும், செப்டமபர் 23 முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நடைபெற உள்ள  மூன்றாவது கட்ட தேர்வுக்கான கால அட்டவணையையும் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.



    மேலும், தேர்வு குறித்து சமூக ஊடங்களில் உலவும் போலியான அறிவிப்புகளை நம்ப வேண்டாம், ugcnet.nta.nic.in ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Examination, UGC

    அடுத்த செய்தி