முகப்பு /செய்தி /கல்வி / 2022 ஜேஇஇ முதல் அமர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு - தேசிய தேர்வு முகமை

2022 ஜேஇஇ முதல் அமர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு - தேசிய தேர்வு முகமை

தேர்வு

தேர்வு

jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் 18/04/2022 முதல் 25.04.2020 வரை மட்டும் புதிதாக சமர்ப்பிப்பதற்கு/பூர்த்தி செய்வதற்குமான வசதி ஆன்லைனில் இருக்கும்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

2022  ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு  ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான  விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை மீண்டும் தொடங்கியுள்ளது.

2022 ஜேஇஇ மெயின் தேர்வு:

தேசிய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் பல பொறியியல் கல்லூரிகள் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முறை பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு முறை மட்டுமே தேர்வு: 

கடந்தாண்டை போல் இல்லாமல், தற்போது இரண்டு முறைகள் மட்டுமே ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு முறைகள் தேர்வு நடத்தப்பட்டன.

மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதினர். இதில், மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில் தரவரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய 6 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை - தேர்வு நடைபெறும். இரண்டவாது முறையாக மே மாதத்தில் 24, 25, 26, 27, 28, 29 ஆகிய 6 நாட்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தது.

தேர்வு தேதி மாற்றம்: 

இதற்கிடையே, பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, 2022 ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு (JEE Main) தேதியில் தேசிய தேர்வு முகமை திருத்தம் செய்தது. ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட முதலாவது பிராதான தேர்வு, ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை - தேர்வு நடைபெறும். மே மாதத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாவது பிரதான தேர்வு, ஜூலை 20ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு: 

2022  ஜேஇஇ  தேர்வின் முதல் அமர்வு ஜூன் மாதத்துக்கு  ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அத்தேர்வுக்கான  விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை  மீண்டும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  JEE (Main) 2022 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு/புதிதாகச் சமர்ப்பிப்பதற்கு, மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு  அளிக்கப்படுகிறது.

ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள், jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் 18/04/2022 முதல் 25.04.2020 வரை மட்டும் புதிதாக சமர்ப்பிப்பதற்கு/பூர்த்தி செய்வதற்குமான வசதி ஆன்லைனில் இருக்கும் என்று அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது

ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வது/ சமர்ப்பிப்பது ஆகியவை மாலை 5 மணி வரையிலும் கட்டணம் செலுத்துவது இரவு 11 50 வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும்

தேவையான கட்டணங்களை, கடன் அட்டை /சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை/ யுபிஐ பேடிஎம் மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 011-40579000/011-69227700. மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in

தேர்வுமுறை:

கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும். ஆனால், தாள் - Iல் உள்ள இரண்டு பகுதிகளுக்கும் (MCQ & Numerical Value Type Questions) நெகடிவ் மதிப்பெண் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை இருக்கும்.

First published:

Tags: Jee