Home /News /education /

CUET தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய அறிவிப்பு

CUET தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

முன்னதாக, இத்தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை (Provisional Answer Keys) தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால், தேர்வர்கள் நாளை இரவு 11.50 மணிக்குள் முகமைக்கு தெரியப்படுத்தலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மத்திய பல்கலைக்கழக இளங்கலை படிப்பு  நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய  நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன் படி, ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. 

    இந்நிலையில், தேர்வு முடிவுகள்  வரும் 15ம் தேதி அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவோ  வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர்  தனது ட்விட்டர் பதிவில், " இளங்கலை பல்கலைக்கழக தகுதி தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அல்லது முடிந்தால், ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தேசிய தேர்வு முகமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு தகுதி மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு இளங்கலை படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தும் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைய போரட்டலை தயாராக வைத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.    



    முன்னதாக, இத்தேர்வின் உத்தேச விடைக்குறிப்பை (Provisional Answer Keys) தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால், தேர்வர்கள் நாளை இரவு 11.50 மணிக்குள் முகமைக்கு தெரியப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்படும்.

    இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.



    மேலும், தேர்வரின் OMR விடைத்தாளையும், இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகளையும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இதன்மூலம், விடைத்தாளில் நிரப்பிய கேள்விகள் அனைத்தும் இயந்திரம் மூலம் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள முடியும்.

    இந்த மதிப்பீட்டில் ஏதேனும் குறை இருந்தால், நாளை இரவு 11.50 மணிக்குள் தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200-வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.

    இதையும் வாசிக்க: நீட் தேர்வு முடிவு : தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு

    நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் உள்ள 54,555 பாட பிரிவுகளில் சேரக்கை இந்து நுழைவு தேர்வு மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: UGC

    அடுத்த செய்தி