ஹோம் /நியூஸ் /கல்வி /

யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு? சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ.. தேசிய தேர்வு முகமை விளக்கம்

யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவு? சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ.. தேசிய தேர்வு முகமை விளக்கம்

காட்சி படம்

காட்சி படம்

நெட் தேர்வு பங்குதாரர்கள் அனைவரும்  இதுபோன்று திசைதிருப்பக்கூடிய தகவல்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அக்டோபர் 10ந் தேதி யூஜிசி நடத்திய நெட் தேர்வில் வரலாறு பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உண்மையில்லை என்று தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.

  இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 10-10-2022 அன்று இரண்டாம் ஷிப்ட்டில் நடைபெற்ற வரலாறு பாடத்திற்குகான வினாத்தாள் கசிந்ததாக  யூடுயுப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல்  வெளியானது.

  இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுப்பதுடன் பொய்யானது என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம். சமூக ஊடங்களில் பரவப்படும் வினாத்தாளும்,தேர்வின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளும் வெவ்வேறாகும்.

  நெட் தேர்வு பங்குதாரர்கள் அனைவரும்  இதுபோன்று திசைதிருப்பக்கூடிய தகவல்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

  இதையும் வாசிக்கUGC-NET தேர்வு மையத்தில் குளறுபடி; மதுரை மாணவிக்கு உதவிய எம்பி சு.வெங்கடேசன்

  எனவே, விண்ணப்பதாரர்கள், www.nta.ac.in ugcnet.nta.nic.in-ல் வெளியாகும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: UGC