Home /News /education /

தமிழ் வழிப்பயிலும், கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான தமிழ் வழிப்பயிற்சி : சென்னை ஐஐடி

தமிழ் வழிப்பயிலும், கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான தமிழ் வழிப்பயிற்சி : சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

புள்ளிவிவரப்படி, 10 முதல் 15 விழுக்காடு அளவுக்கு குழந்தைகள் டிஸ்லெக்சியாவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ்வழியில் கல்வி பயிலும் டிஸ்லெக்சியா எனப்படும்  கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சீராக்கத் திட்டத்தை சென்னை டிஸ்லெக்சியா சங்கத்துடன் இணைந்து அளிக்க ஐஐடி சென்னை முன்வந்துள்ளது. சென்னை ஐஐடி, என்பிடெல் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக ஆன்லைன் வழியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    'தமிழ் வழிப் பயிற்சி'த் திட்டத்தை ஐஐடி சென்னை இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை டிஸ்லெக்சியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "பரந்த சமுதாயத்திற்கு ஐஐடி சென்னையின் தொடர்பு குறித்த கேள்விக்கு இந்த முன்முயற்சி சக்திவாய்ந்த ஒரு பதிலாக இருக்கும். என்பிடெல் மூலமாக இந்த கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்குவது மட்டுமின்றி, அதன் முன்னாள் மாணவர்கள்  தலைமையில் இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    ஏஐ4பாரத்-ல் (செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'ஓபன் சோர்ஸ்' இந்திய மொழி கட்டமைப்பு ) உருவாக்கப்பட்டு உள்ளதைப் போன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி அடிப்படையில் பிற மொழிகளிலும் இந்த முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளிலும் இதனை கிடைக்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

    'தமிழ் வழிப் பயிற்சி'யின் தாக்கம் குறித்து எடுத்துரைத்த, சென்னை டிஸ்லெக்சியா சங்கத் தலைவர் டி.சந்திரசேகர், "புள்ளிவிவரப்படி, 10 முதல் 15 விழுக்காடு அளவுக்கு குழந்தைகள் டிஸ்லெக்சியாவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்வதும், அதனை மதிப்பீடு செய்து அதற்குரிய சீராக்கத்தை மேற்கொள்வதும் அவசியமாகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள இதுபோன்ற பள்ளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்" என்றார்.

    இதுபோன்ற குழந்தைகளுக்குத் தேவையான சீராக்கத்தை வழங்கும் வகையில்தான், 'தமிழ் வழிப் பயிற்சி' என்ற முழுமையான தொகுப்பை எம்.டி.ஏ. வடிவமைத்து மேம்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

    டிஸ்லெக்சியா, குழந்தை வளர்ச்சி, பரிசோதனை, வாசித்தல், சொற்கள் உச்சரிப்பு, எழுதுதல், கணிதம், படிக்கும் திறன், பல்வகை நுண்ணறிவுகள் பற்றிய அடிப்படைத் தொகுதிகள், ஒவ்வொரு தொகுப்புக்கும் வீடியோக்கள்,  பயனுள்ள கற்றலுக்கு உதவும் தொகுதி-முடிவு குறுகிய வினாடிவினா,  பகுப்பாய்வு மற்றும் வினாடி வினாவுடன் 7 பரிசோதனை ஆய்வுகள்  உள்ளிட்ட தனித்துவ அம்சங்கள் இந்த 'தமிழ் வழிப் பயிற்சி'யில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் வழிப்பயிற்சி இணைய பக்கம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Chennai IIT

    அடுத்த செய்தி