• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஆன்லைன் கிடையாது.. நவம்பரில் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

ஆன்லைன் கிடையாது.. நவம்பரில் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

செமஸ்டர் தேர்வு

செமஸ்டர் தேர்வு

நவம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வினை மாணவர்களை நேரடியாக வரவழைத்து கொரொனோவிற்கு முந்தைய காலக்கட்டங்களை போல நேரடியாக தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.

  • Share this:
ஆன்-லைன் வழியில் அல்லாமல் நவம்பர் மாதம் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரொனோ பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு செமஸ்டர் தேர்வுகள் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியிலும்,(open book exam எனப்படும் மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே புத்தகத்தை பார்த்து தேர்வுகளை எழுதும் முறையிலும் நடத்தப்பட்டன.

இந்நிலையில் கொரோனோ தாக்கம் குறைந்த வரக்கூடிய சூழலில் மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வினை மாணவர்களை நேரடியாக வரவழைத்து கொரொனோவிற்கு முந்தைய காலக்கட்டங்களை போல நேரடியாக தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.

அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு மற்றும் உறுப்புக் கல்லூரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் நேரடியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்ளது.   சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 5-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற கீழடி: தமிழக தொல்லியல் துறை குறித்த தகவல் இல்லை என புகார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: