ஹோம் /நியூஸ் /கல்வி /

வரும் சனிக்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

வரும் சனிக்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தீபாவளி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவேதெரிவித்திருந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைஅக்டோபர் மாதம்  24ம் தேதி  கொண்டாடப்பட்டது.  இந்த பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும்  விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவேதெரிவித்திருந்தது . அதன்படி வரும் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட உள்ளன.

    இதையும் வாசிக்க: லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

    முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிவேலை நாட்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில்,  கடந்த ஆண்டுகளைப் போல் இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட வில்லை. பாடங்களை முழுமையாக நடத்த வேண்டிய கடமை உள்ளது. முன்னதாக, தீபவாளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 19ம் தேதி வரும் சனிக்கிழமை வார விடுமுறைக்கு பதிலாக பணி நாளாக நடைபெறும் என்று தெரிவித்தார்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: School education department