• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 14ல்.துவக்கம் செப்டம்பர் 4ல் தரவரிசைப்பட்டியல் வெளியாக வாய்ப்பு

  • Share this:
பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் ஆகியப் படிப்புகளில்  சேர்வதற்கு மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில்   www.tneaonline.org  (or) www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 26 ந் தேதி முதல் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 26 ந் தேதி முதல் ஆகஸ்ட் 24 ந் தேதி வரையில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது மேலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வந்தப்பின்னர் தான்  இளங்கலை முதலாமாண்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்பில் 2021-22 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பணிகளை தொழில்நுட்பக் கல்வி கழகம் துவக்கி உள்ளது. பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூலை 26 ந் தேதி முதல் www.tneaonline.org  or www.tndte.gov.in  என்ற இணையதளத்தில்  ஆகஸ்ட் 28 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு உதவிடுவதற்காக பொறியியல் கல்லூரிகளில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் விண்ணப்பம் செய்ய தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

*தரவரிசைப் பட்டியல்* 

மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றப்பின்னர் அவர்களுக்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25 ந் தேதி வெளியிடுவதற்கு உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  செப்டம்பர் 4 ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டமிட்டுள்ளது.

*பொறியியல் கலந்தாய்வு* 

சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 ந் தேதி முதல் 11 ந் தேதி வரையிலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 ந் தேதி முதல் அக்டோபர் 16 ந் தேதி வரையிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான துணை கலந்தாய்வு அக்டோபர் 12 ந் தேதி முதல் 16 ந் தேதி வரையில் நடைபெறுகிறது.  மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம், கலந்தாய்வு அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: