தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லை என்ற தகவலும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 2022-23 ம் கல்வியாண்டில் வரும் 13 ந் தேதி முதல் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் துவக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளை திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியுடன் ஜூன் 14ந் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணியை நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளியில் 10 மாணவர்களை சேர்த்தால் 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளிலும் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் தொடக்கக் கல்வித்துறையில் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் 22 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவரும், ஆசிரியர்களும் இல்லாமல் உள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், 2 மாணவர்கள் 24 பள்ளிகளிலும், 3 மாணவர்கள் 41 பள்ளிகளிலும், 4 மாணவர்கள் 50 பள்ளிகளிலும்,5 மாணவர்கள் 77 பள்ளிகளிலும் இருக்கின்றனர். 114 பள்ளிகளில் 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
அதேபோல் 3800 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 3,131 பள்ளிகளில் 60 மாணவர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் மட்டுமே 5 வகுப்புகளுக்கான பாடங்களை நடத்தும் சூழ்நிலை உள்ளது. அவரும் அலுவல் பணிக் காரணமாக வெளியில் சென்றால் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் உள்ள 31,336 பள்ளிகளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 537 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும், 25 லட்சத்து 50 ஆயிரத்து 997 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்கிற தகவலும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் அரசுப்பள்ளிகள் படிப்படியாக மூடப்பட்டு வருவது எதிர்காலத்தில் தனியார் பள்ளிகள் மட்டுமே கல்வி வழங்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தும் உடனடியாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Department of School Education, Govt School, School student, Tamil News, Tamilnadu