Home /News /education /

பாஞ்சாங்குளம் பள்ளியில் சாதி பாகுபாடு நடந்ததா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பாஞ்சாங்குளம் பள்ளியில் சாதி பாகுபாடு நடந்ததா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பாஞ்சாகுள அரசுப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக மாணவர்கள் கீழே அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்க மளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
தென்காசி அருகே அரசு பள்ளியில் சாதி பாகுபாடு காட்டப்படவில்லை என்பது  பள்ளிக்கல்வித்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், " பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஒரு பிரிவு மாணவர்களை கீழே உட்கார வைத்து பள்ளியில் சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு நடத்திய விசாரணையில் பள்ளியில் அவ்வாறு நடைபெறவில்லை என்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்திற்காக மாணவர்கள் கீழே அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,  அதிகமாக காய்ச்சல் பரவி வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு முடிவு எடுப்பதாக இருந்தால் சுகாதாரத் துறையுடன் முதலமைச்சர அலுவலகம் உரிய ஆலோசனை நடத்தி அதன் பிறகு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

இதையும் வாசிக்க: EXCLUSIVE: தென்காசி தீண்டாமை கொடுமை: கைதானவர்களை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு... முக்கிய சட்டப்பிரிவைப் பயன்படுத்தப் போவதாக தகவல்

மழைக்காலம் தொடங்கும் நிலையில் தண்ணீர் தேங்க கூடிய பள்ளிகளை ஏற்கனவே கண்டறிந்துள்ளதால் அவ்வாறு தண்ணீர் தேங்கினால் உடனடியாக நீரை வெளியேற்றவும் மோசமான நிலையில் கட்டிடங்கள் இருந்தால் அருகாமையில் உள்ள கட்டிடங்களில் வாடகை செலுத்தி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.
Published by:Salanraj R
First published:

Tags: Department of School Education, Minister Anbil Mahesh

அடுத்த செய்தி