Home /News /education /

புத்தகப்பைகள் இல்லாத தினம்.. திடீரென ரத்து செய்த பள்ளிக்கல்வித்துறை

புத்தகப்பைகள் இல்லாத தினம்.. திடீரென ரத்து செய்த பள்ளிக்கல்வித்துறை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

No School bag day : புத்தகப்பைகள் இல்லாத தினம் அறிவிக்கப்பட்ட வேகத்திலேயே இந்த திட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    புத்தகப் பைகள் இல்லாத தினம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மாணவர்களிடையே மன அழுத்தத்தை போக்கவும் வாழ்வியலை மேம்படுத்தும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் புத்தக பைகள் இல்லா தினம் செயல்பாட்டிற்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    Also Read: இதுதான் நீட் ரகசியம்.. கடலூர் பிரச்சாரத்தில் போட்டுடைத்த உதயநிதி ஸ்டாலின்

    இத்திட்டத்தை செயல்படுத்த 1.26கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களிடையே கற்றல் திறனை மேம்படுத்த வேண்டி இருப்பதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது . அறிவிக்கப்பட்ட வேகத்திலேயே இந்த திட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Children education, Education, Government school, School students

    அடுத்த செய்தி