Home /News /education /

பொறியியல் கலந்தாய்வில் யாருக்கு ரேண்டம் எண் இல்லை: அமைச்சர் பொன்முடி

பொறியியல் கலந்தாய்வில் யாருக்கு ரேண்டம் எண் இல்லை: அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

சம வாய்ப்பு எண்(Random Number) பயன்பாடு குறைந்துள்ளது. விண்ணப்பபதாரர்கள் யாருக்கும் சமவாய்ப்பு எண் வழங்கப்படவில்லை - அமைச்சர் பொன்முடி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    TNEA counselling: 2022-2023ம் ஆண்டு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், "  2,11,905 மாணவர்கள் இந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கூடுதலாக  36,905 பேர் விண்ணப்பித்துள்ளனர். பதிவுக் கட்டணம் மற்றும் சான்றிதழ் ஆவணங்கள் சமர்ப்பித்த  1,58,157 மாணவர்களுக்கு தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    அரசு ஒதுக்கீட்டில்  பொறியியல் கல்லூரிகளில் 1, 48, 811 இடங்கள் உள்ளன என்றும்  7.5 விழுக்காடு இட ஒதுக்கூட்டின் கீழ் 10,968 இடங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். விண்ணப்பித்த மாணவர்கள் திருத்தம் மேற்கொள்ள இன்று முதல் 19 ந் தேதி வரை சேவை மையத்திற்கு சென்று முறையிடலாம் என்றும் கூறினார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளும் 12ம் வகுப்பு தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  தரவரிசைப் பட்டியலில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு  175 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    10, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், " தரவரிசைப் பட்டியலில் இரண்டிற்கு மேற்பட்ட தேர்வர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் சம வாய்ப்பு எண் அடிப்பையில் மூப்பு நிலை  நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அரசின் புதிய நெறிமுறைகளின் படி, 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் 10ம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, சம வாய்ப்பு எண்(Random Number) பயன்பாடு குறைந்துள்ளது. விண்ணப்பபதாரர்கள் யாருக்கும் சமவாய்ப்பு எண் வழங்கப்படவில்லை என்றும்  தெரிவித்தார்.

    www.tneaonline.org என்கிற இணையதளத்தில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பயனர் பெயர்/கடவுச்சொல் மூலம்  தரவரிசையைச் பார்க்கலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna University, Engineering counselling

    அடுத்த செய்தி