Home /News /education /

Lab Assistant : ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

Lab Assistant : ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

பள்ளி கல்வித் துறை

பள்ளி கல்வித் துறை

இப்பணியிடத்தின் நேரடி நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி பத்தாம் வகுப்பாகும்.

    கடந்த 2015ம் ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களின் பதவி உயர்வு கோரிக்கையை நிராகரித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவி நேரடி நியமனத்திற்ககான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது. எழுத்து தேர்வு நடத்தப்பட்டு இனவாரி சுழற்சி மற்றும் முன்னுரைமை அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில்  முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது. மொத்தமாக,  4362 ஆய்வாளர்கள் அரசுப் பள்ளிகளில்   நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டல், பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் உ.வேதபுரி  தான் பணியில் சேர்ந்து 5 வருடங்கள் கடந்த நிலையில், தமிழ்நாடு பொதுசார்நிலைப் பணியிடத்திலேயே தகுந்த அடுத்த பதவி உயர்வு அளிக்க வழிவகை செய்யுமாறும், ஆய்வக உதவியாளர் பணியிடத்தை புதிய பணியிடம் எனக்குறிப்பிட்டு விதிகள் உருவாக்கவும் கோரியுள்ளார்.

    இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குனர், " இதே பொருள் தொடர்பாக பல ஆய்வக உதவியாளர்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பொதுசார்நிலைப்பணியின் கீழ், ஆய்வக உடனாள் என்ற பணியிடம் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உருவாக்கப்பட்டு பின்னர், கல்வி, அறிவியல் மற்றும் தொழிற்கல்வித்துறை நாள் 29.06.1994ன்படி இப்பணியிடங்கள் ஆய்வக உதவியாளர் என்று பதவிப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க NEET 2022 : நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    இவ்விதியிலேயே ஏற்கனவே ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்குரிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆய்வக உதவியாளர் பணியிடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டமையால் இது புதிய பணியிடம் என்பதும், விதிகள் வகுக்க வேண்டும் என்ற நிலை எழவில்லை என்பதும் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், இப்பணியிடத்தின் நேரடி நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி பத்தாம் வகுப்பாகும். இப்பணியிடத்திலிருந்து தமிழ்நாடு பொதுசார்நிலைப்பணி விதியின் பதவி உயர்வு வழங்குவதற்கு வழிவகை எதும் இல்லை என்பதால் கோரிக்கையை நிராகரித்து ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குனர் தனது பதிலில் தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Department of School Education

    அடுத்த செய்தி