Home /News /education /

மத்திய அரசின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் திட்டம்: பின்வாங்குகிறதா தனியார் நிறுவனங்கள்?

மத்திய அரசின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் திட்டம்: பின்வாங்குகிறதா தனியார் நிறுவனங்கள்?

மத்திய கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

உலகில் உச்சத்திலுள்ள 100 பல்கலைக்கழகங்களுக்கு இணையான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை இந்தியாவில் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்

    மூன்றாண்டுகளுக்கு முன்னதாக புகழ்பெற்ற நிறுவனங்கள் (Institute of Eminence) என உத்தேசமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இதுவரை தங்களது தயார்நிலை அறிக்கையை (Readiness Reports) சமர்பிக்கவில்லை என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, கடந்த 2017ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்திய கல்வியை பன்னாட்டுமயமாக்குவது, உலகில் உச்சத்திலுள்ள 100 பல்கலைக்கழகங்களுக்கு இணையான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை இந்தியாவில் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    இத்திட்டத்தின் கீழ்,  10 அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கும், 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் புகழ்பெற்ற நிறுவனங்கள் (Institute of Eminence) என்ற தகுதிகள் வழங்கப்படும்.   இதுவரை, 8 அரசு நிறுவனங்களுக்கும், 3 தனியார் நிறுவனங்களுக்கும் புகழ்பெற்ற நிறுவனங்கள் என்ற சிறப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது. 






























































    அரசு புகழ்பெற்ற நிறுவனங்கள் 
    கல்வி நிறுவனங்கள் 
    1.Indian Institute of Science, Bengaluru, Karnataka
    2.IIT Delhi, Delhi
    3.IIT Bombay, Mumbai, Maharashtra
    4.IIT Madras, Chennai, Tamil Nadu
    5.IIT Kharagpur, Kharagpur, West Bengal
    6.University of Delhi, Delhi
    7.Banaras Hindu University, Banaras, Uttar Pradesh
    8.University of Hyderabad, Hyderabad, Telangana
    தனியார் புகழ் பெற்ற நிறுவனங்கள் 
    1.Birla Institute of Technology and Sciences, Pilani, Rajasthan
    2.Manipal Academy of Higher Education, Manipal, Karnataka
    3.OP Jindal Global University, Sonipat, Haryana

    மேலும், கூடுதலாக வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), வேலூர்; அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்; ஜாமியா ஹம்தார்த், புதுடெல்லி; கலிங்கா தொழிநுட்பக் கல்வி, புவனேஸ்வர்; பாரதி இன்ஸ்டியூட், மொகாலி  உள்ளிட்ட ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு உத்தேச புகழ்பெற்ற நிறுவனங்கள் (Letter of Intent)என்ற ஒப்புதலை மத்திய கல்வி அமைச்சகம் அளித்தது.

    UGC(InstitutionsofEminenceDeemedtobeUniversities)Regulations,20l7 விதிமுறைகளின் படி, உத்தேச ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது தயார்நிலை அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை அதிகாரம் பொருந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு (Empowered Expert Committee) பரிசீலனை செய்து மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். இதன் அடிப்படையில், புகழ்பெற்ற நிறுவனங்களாக  மத்திய கல்வி அமைச்சகம்  அறிவிக்கும். ஆனால்,  தற்போது வரை, உத்தேச ஒப்புதல் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது அறிக்கையை சமரிப்பிக்க வில்லை  என்று மக்களைவையில் கேள்வி ஒன்றுக்கு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.



    Published by:Salanraj R
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி