ஹோம் /நியூஸ் /கல்வி /

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

த்மிழகத்தில் பள்ளிகளில் ஆடை வடிவமைத்தல், மின்னணு சாதனங்களை பராமரித்தல், பியூட்டிசியன் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல இந்த பாடப்பிரிவுகள் தொடரும் என்றும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் இந்த பாடத்திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

9 ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம்  வரும் கல்வியாண்டில் இருந்து கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  மேலும், தற்காலிக ஆசிரியர்கள் 200க்கும் அதிகமானோர் வேலையில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டது.

பொதுவமாக 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களுக்கு  தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் இடம்பெறும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப பாடமாக தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018-2019-ஆம் கல்வியாண்டில் 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.3.55 கோடியில் தொழிற்கல்வித் திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டது.  அதன்படி, 9ம் வகுப்பில் தொழிற்கல்வி விருப்ப பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் இருந்து மீண்டும் பழையபடி 11 , 12ஆம் வகுப்புகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்களை நடத்துவதற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதன்படி இதில்

டெய்லரிங், பியூட்டிஷியன், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின்சாதனங்களும் பழுதுபார்த்தலும், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தல் ஆகிய பாடங்கள் உள்ளன.

இதை படிக்க: 12-ம் வகுப்பு பெதுத்தேர்வு : வேதியியல் பாடத்திற்கு போனஸ் மதிப்பெண்கள் அறிவிப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்கனவே 600க்கும் மேற்பட்ட 11, 12ம் வகுப்புகளில்  ஆசிரியர்கள்  நியமிக்கப்படாததால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டன.  இதனையடுத்து  தற்போது ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் தொழில் கல்வி பாடம் மூடப்படுகிறது

இந்த படிப்பு மூடப்படுவதால்  இதனை நடத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த ஆண்டு நிதி கேட்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தொழிற் கல்வி பயின்று சுய வேலைவாய்ப்பில் ஈடுபடலாம் என்று என்று எண்ணுகின்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் இந்த முடிவு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Published by:Murugesh M
First published:

Tags: Department of School Education, DPI