• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தமிழகத்தில் கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வித்துறை அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி தேர்வு கிடையாது நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது, நேரில் வந்து தான் செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என  உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    உயர்கல்வித்துறையின் அறிவிப்பை ஏற்று பொறியியல் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து துறையின் செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன் அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் மட்டுமே தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக நடைபெற்றுவந்தன.

    தற்போது கொரோனா தொற்று குறைந்திருக்கக் கூடிய நிலையில் மாணவர்களை நேரடியாக கல்லூரிகளுக்கு வரவழைத்து தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி நலனை பாதுகாக்கும் அடிப்படையில் தற்போது இந்த முடிவை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை நேரடியாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆன்-லைன் வழியில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வகையில் தற்போது உயர்கல்வித்துறை நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என தெளிவுப்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் இரண்டு வார காலத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி நவம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த செய்முறை தேர்வு மற்றும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகள் இரண்டு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: