முந்தைய தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் பாஸ் - பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

முந்தைய தேர்வில் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் பாஸ் - பள்ளிக்கல்வித்துறை
(கோப்புப் படம்)
  • Share this:
பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாகக் கருதப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகைப்பதிவின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பல மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்பதுவும், சிலர் தேர்வுக்கே வரவில்லை என்பதுவும் தேர்வுத்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் பார்க்க:-

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்... யார் இவர்கள்?

இதையடுத்து காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading