Home /News /education /

செயலி மூலம் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவு - நாளை முதல் அமல்!

செயலி மூலம் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவு - நாளை முதல் அமல்!

மாணவர்கள் (Students)

மாணவர்கள் (Students)

ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பத்தை TANSED செயலியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்- தமிழக பள்ளிக்கல்வித்துறை

    நாளை முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் என்றும், வருகைப் பதிவை செயலியாக பதிவு செய்தால் மட்டும் போதுமானது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    அரசு/அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் நிகழ்நிலைத் தகவல்கள் அனைத்து EMIS இணைய தளத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நிர்வாகப் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் வருகைப் பதிவேடுகள், விளையாட்டுப் பதிவேடுகள், உதவித் தொகை பதிவேடுகள் (Scholarship Registration) போன்ற முக்கியப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

    இதில், ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி அடையாள எண், ஒவ்வொரு பள்ளிக்கும் (அரசு/ தனியார் ) தனித்தனி உள்நுழைவு வசதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டிடங்கள், மைதான வசதிகள் தொடர்பான அனைத்து தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவியேற்றம் செய்து வருகின்றன. அதேபோன்று, தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்தல்/ புதிய அங்கீகாரம் வழங்குதல் ஆகியவை இணைய வழி மூலம் நடத்தப்படுகின்றன.

    ஒவ்வொரு மாணவர்களின் வருகைப் பதிவை குறிப்பதற்கும் மற்றும் அவர்களின் வருகைப் பதிவை கண்காணிப்பதற்கும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு பிரத்தியோக உள்நுழைவு வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க:   நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் இருந்தாலும் மருத்துவப் படிப்புகளுக்கு வாய்ப்பு: மத்திய அரசு

    இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் என்றும், வருகைப் பதிவை செயலியாக பதிவு செய்தால் மட்டும் போதுமானது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பத்தை TANSED செயலியில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Department of School Education, Government school

    அடுத்த செய்தி