ஹோம் /நியூஸ் /கல்வி /

இங்கிலாந்து அரசின் புதிய விசா- இந்திய கல்வி நிறுவனங்கள் புறக்கணிப்பு

இங்கிலாந்து அரசின் புதிய விசா- இந்திய கல்வி நிறுவனங்கள் புறக்கணிப்பு

High Potential Individual (HPI) visa

High Potential Individual (HPI) visa

3 ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி பணி செய்வது, வேலை தேடுவது, சுயதொழில் செய்வது, தன்னார்வ பணிகளில் ஈடுபடுவது போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இங்கிலாந்து அல்லாது வெளிநாட்டு உயர்க்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களை கவர்ந்திழுக்கும் விதமாக  மிகச்சிறந்த செயல்திறன் கொண்ட தனிநபர் விசாவினை (High Potential Individual Visa Scheme) இங்கிலாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை, டைம்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய  பல்கலைக்கழக  தரவரிசைப் பட்டியல், Academic Ranking உலக பல்கலைக்கழக தரவரிசை ஆகிய பட்டியல்களில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்துள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விசா மூலம்  3 ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி பணி செய்வது, வேலை தேடுவது, சுயதொழில் செய்வது, தன்னார்வ பணிகளில் ஈடுபடுவது போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த விசா 3 ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் மட்டும் என்றும், எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகுதிகள்:  

ஆங்கில மொழியறிவு இருக்க வேண்டும்.

குறிப்பிடத்தக்க சேமிப்புத் தொகை இருக்க வேண்டும்.

இந்தியாகடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தகுதியடைந்த உயர்க்கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த  எந்தவொரு உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் இடம்பெறவில்லை. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஆகிய நாடுகள் இந்த புதிய முறையில் அதிகம் பயனடைந்துள்ளனர். இந்த புது விசாமுறையில் தெற்காசிய நாடுகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக கல்வியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஐஐடி பம்பாய், ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூ ஆகிய மூன்று கல்வி நிறுவனங்கள் க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2022-ல் முதல் 200 இடங்களில் இடம்பிடித்தன. டைம்ஸ் தரவரிசைப் பட்டியலின் முதல் 300 இடங்களில் எந்தவொரு இந்திய கல்வி நிறுவனங்களும் இடம்பெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Education