Home /News /education /

1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு கிடையாதா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு கிடையாதா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே.6ம் தேதி முதல் மே.30ம் தேதி வரை நடைபெறும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி முதல், மே31ம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி தொடங்கி மே.28ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இதர வகுப்புகளுக்கான தேர்வு தேதி குறித்து பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 6-9ஆம் வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும்.

    TANCET 2022 பதிவு செயல்முறை – எப்படி விண்ணப்பிப்பது..!

    9ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல் 4 வரை நடைபெறும். 6-9ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 30ம் தேதி வெளியிடப்படும்.

    நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ஆம் தேதி ஆகும். 2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி தொடங்கும். அதேசமயம் 11ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதல்மைச்செயலாளர் காகர்லா உஷா கூறும்போது, தேர்வுகள் யாருக்கும் ரத்துசெய்யப்படாது. தேர்வு நடைபெறாது என்று வெளிவந்த செய்து தவறானது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Exam, Tn schools

    அடுத்த செய்தி