உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ கல்வி மாணவர்களுக்கு மேற்குவங்க மாநில மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது உண்மையா? எனவும், மாநில மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறை தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநில மக்களவை உறுப்பினர்கள் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதார மற்றும் பாரதி பிரவீன் பவார், "நாட்டின் மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ கல்வி ஆணையம் அளித்த தகவலின்படி மேற்குவங்க மாநிலத்தில் உக்ரைனியில் இருந்து திரும்பிய 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கான எந்த தகவலும் இல்லை. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை மாநில மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர விதிகள் ஏதும் இல்லை.
இதையும் வாசிக்க: நீட் விலக்கு மசோதா : மத்திய அரசு கேள்விகளுக்கு பதில்கள் தயார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
அதேபோல் 2019 விதியின்படி வெளிநாட்டு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யவோ அல்லது இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிப்பை தொடரவோ இடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு மருத்துவ கல்வி நிலையங்களிலும், கல்லூரிகளிலும் வெளிநாட்டு மாணவர்களை இடமாற்றம் செய்யவும் அல்லது உள்நாட்டில் படிக்க வைக்கவோ தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: TNPSC Group 4: குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது... 7,031 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி
முன்னதாக, உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பின் காரணமாக, தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ள 1200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை தங்களது படிப்பை இந்தியாவில் தொடரும் வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைசச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.