முகப்பு /செய்தி /கல்வி / அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் யுனானி முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்!

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் யுனானி முதுகலை பட்டப்படிப்பு தொடக்கம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஒரு வருடத்திற்கு உள்நோயாளியாக 13,593 பேரும், புறநோயாளியாக 8,48,543 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 67 யுனானி பிரிவுகளில் 59 புனானி மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனா தொற்றுநோய் காலத்தில் சித்தா மருத்துவத்தால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்தார்

முன்னதாக, இன்று (15.03.2023) அமைச்சர்  மா.சுப்பிரமணியன்   சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில், உலக யுனானி தினம், யுனானி முதுகலை பட்டப் படிப்பினை தொடங்கி வைத்து, யுனானி மருத்துவக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களை வழங்கி, விழா பேரூரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு; யுனானி மருத்துவம் என்பது கிரேக்க-அரேபிய வைத்திய முறையாகும். யுனானி மருத்துவத்தின் முன்னோடியான ஹக்கிம் அஜ்மல் கான் 1920 இல் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தர் ஆவார். பிப்ரவரி 11 அவர் பிறந்த தினத்தினை தேசிய யுனானி மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. மனித உடலில் இருக்கும் திரவங்களான கோழை, குருதி, மஞ்சள் பித்தம், கரும் பித்தம் ஆகியவற்றுக்கிடையே உள்ள சமநிலையின்மையை நோய்க்கான காரணமாக யுனானி வைத்தியமுறை உள்ளது. யுனானி மருத்துவமுறை, நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை, முழுமையாக மனித உடலையும் மனதையும் குணப்படுத்துகிறது. அரசு யுனானி மருத்துவக்கல்லூரி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதையும் வாசிக்க: NEET PG 2023 Results: நீட் முதுகலைத் தேர்வு முடிவுகள் வெளியானது - ரிசல்ட் செக் செய்வது எப்படி?

BUMS பட்டப்படிப்பு 16 மாணவர்கள் சேர்க்கையில் தொடங்கி 26 ஆக உயர்ந்து தற்பொழுது 60 இருக்கைகள் உயர்ந்து உள்ளது. M.D யுனானி பட்டமேற்படிப்பு 2022-23 இல் தொடங்கப்பட்டது. தற்பொழுது பொது மருத்துவத்தில் 3 இருக்கைகளும் மற்றும் யுனானி சிறப்பு மருத்துவத்தில் 4 இருக்கைகளும் துவங்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க  நீட் தேர்வை ரத்து செய்வது இப்படித்தான்.. பிரதமரிடமும் சொல்லிட்டு வந்துருக்கேன்...” - ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி..!

2022-23 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் அறிவிப்பு எண்.130ன்படி தமிழ்நாடு முதலமைச்சரால் 22.09.2022 அன்று தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000/- மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும், அறிவிப்பு எண்.136-ன்படி இந்திய மருத்துவத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் அதி நவீன தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் தனியார் நிறுவனங்களின் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருந்துகளின் தரத்தினை ஆய்வு செய்து, மருந்துகளின் தரச் சான்றிதழ் தனியார் நிறுவனங்களுக்கு 17.11.2022 அன்று வழங்கப்பட்டது.

அறிஞர் அண்ணா இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் மொத்தம் 79 மருத்துவமனைகள் உள்ளன. அதில், 9 யோகா இயற்கை மருத்துவமனைகள் (Yoga naturopathy Hospital), வாணியம்பாடி யுனானி மருத்துவமனை, நாகர்கோவில்,கோட்டார் ஆயுர்வேதா மருத்துவமனை, 68 சித்தா மருத்துவமனைகள் உள்ளன. இதில் ஒரு வருடத்திற்கு உள்நோயாளியாக 13,593 பேரும், புறநோயாளியாக 8,48,543 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 67 யுனானி பிரிவுகளில் 59 புனானி மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

இந்திய மருத்துவ முறையில் 70,000 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், கொரோனா தொற்றுநோய் காலத்தில் சித்தா மருத்துவத்தால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என அமைச்சர் தெரிவித்தார்.

First published:

Tags: Corona death, Ma subramanian