• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • மும்மொழிக்கொள்கையில் மாற்றமில்லை... இந்திக்கு பதில் ஏதேனும் ஒரு செம்மொழி...!

மும்மொழிக்கொள்கையில் மாற்றமில்லை... இந்திக்கு பதில் ஏதேனும் ஒரு செம்மொழி...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதிய கல்விக்கொள்கைக்கு வரும் புதன்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், மும்மொழிக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக்கொள்கையை தயாரித்திருந்தது. இதன் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டபோது இந்தி கட்டாயம் என்ற பரிந்துரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    மேலும், மும்மொழிக்கொள்கை, இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்ற பரிந்துரைகள் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதனை அடுத்து, புதிய கல்விக்கொள்கை வரைவு மீது பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரியிருந்தது.

    நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியதால், அரசியல் அரங்கிலும் புதிய கல்விக்கொள்கை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கூற கால அவகாசம் முடிந்த நிலையில், அந்த கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டன.

    தற்போது, புதிய கல்விக்கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அமைச்சரவை வரும் புதன் கிழமை ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மும்மொழிக்கொள்கை என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்திக்கு பதிலாக ஏதேனும் ஒரு செம்மொழி மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது, இந்தியாவில் தமிழ், மலையாளம், சமஸ்கிருந்தம், ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Also See...


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: