தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை. தமிழகத்தின் கொரொனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு பள்ளிக்கல்வி துறை, சுகாதார துறை, வருவாய்த்துறை இணைந்து ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன்
  • Share this:
தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால், 26 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒரு சிலர் உயிரிழந்து உள்ளனர். எனவே தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை. தமிழகத்தின் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு பள்ளிக்கல்வி துறை, சுகாதார துறை, வருவாய்த்துறை இணைந்து ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு சாட்சிய கூறுகள் இல்லை.

தமிழகத்தில் விரைவில் 7,700 ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கவும், 80,000 வகுப்பறைகளில் கரும்பலகைகள் இல்லாத, வகுப்பறைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய அளவில் தமிழகத்தில் மட்டும் தான் தொலைக்காட்சி வழியாக, கல்வி தங்கு தடையின்றி கற்பிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி வழியாக வகுப்புகளை ஒளிபரப்பு செய்து வரும் தொலைக்காட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோல் உதவி எண் 14417 மூலம் மாணாக்கர்களின் சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் காலம் 7 ஆண்டுகள். இது மத்திய அரசின் முடிவு. அதன் கால அளவு நீட்டிப்பதற்காக மத்திய அரசு அனுமதியை பெற வேண்டும்.  மேலும் 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது 7 ஆண்டுகள் தான்.


டிஆர்பி மற்றும் டெட் தேர்வு எழுதியவர்களுக்கு 7 ஆண்டுகள் முடிந்து விட்டது. அதற்கு மேல் அவகாசம் பெறவேண்டும் என்றால், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர வேறு வழியில்லை. அதற்கும் கடிதம் எழுதுவதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரோடு கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்’ என்று தெரிவித்தார்.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading