Home /News /education /

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளில் LGBTIQA+ மக்களை உள்ளடக்கிய பாடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம்  

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளில் LGBTIQA+ மக்களை உள்ளடக்கிய பாடங்கள்: தேசிய மருத்துவ ஆணையம்  

காட்சிப் படம்

காட்சிப் படம்

பாலியல் வழிபிறழ்தல் (Paraphilia) அடையாளம் காணுதல் குறித்தும்,  விருப்பத்தின் பேரில் நடக்கும்  வழிபிறழ்தல் குறித்தும்  பேசியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
    இளநிலை மருத்துவப் படிப்புகளில்  LGBTIQA+ மக்கள் மற்றும் விரிவான  பாலியல்புசார் (Sexuality) விளக்கங்களை பாடத்திட்டங்களில்  சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, LGBTIQA+ மக்களைப் பற்றிய  வெளிப்படையான அனைத்தையும் உள்ளடக்கிய பல்வேறு அம்சங்களை இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் தேசிய மருத்துவ ஆணையத்த்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், அமைக்கபட்ட நிபுணர் குழு, தனது பரிந்துரையில்," வாழ்க்கையால் உண்மையான தீர்வுகளைக் காணும் வகையில் மருத்துவக் கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

    தடயவியல் மருத்துவத் திறன் பாடப்பகுதிகளில்,   தன்பாலீர்ப்பு கொண்ட பெண் பாலியல் உறவு (Lesbianism) மற்றும் sodomy பாலியல் பண்புகளை  இயற்கைக்கு முரணான பாலுறவில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    அதேபோன்று, பார்வை மோகம்(voyeurism), மாற்றுடைக்காமம் (Transvestism), உடல் காட்டி மகிழ்தல் (exhibitionism), அடக்குமுறையில் சிற்றின்பம் காணல் (masochism) போன்ற பல்வேறு பாலியல் பண்புகளுக்கு பதிலாக பாலியல் வழிபிறழ்தல் (Paraphilia and Paraphilic disorder) அடையாளம் காணுதல் குறித்தும், விருப்பத்தின் பேரில் நடக்கும்  வழிபிறழ்தல் குறித்தும்  பேசியுள்ளது.

    மேலும், 'இரண்டு விரல் கன்னித்தன்மை  பரிசோதனை' மனிதத்தன்மையற்றது, அடக்குமுறைக்கு சமமானது என்றும் தெரிவித்துள்ளது. கன்னித்தன்மையின் முக்கியத்துவம் என்ன? நீதித்துறையில்  கன்னிச்சவ்வு (hymen) முக்கியத்துவம் என்ன? போன்ற கேள்விகளை நீக்கி கன்னித்தன்மை சோதனைக்கு ஏன்  செல்லுபடியாகும் தன்மை இல்லை? (Legitimacy) என்ற கேள்வியை பரிந்துரைத்துள்ளது.

    உளநோய் மருத்துவத்தில் பல்வேறு கட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பால்உளவியல்  மற்றும் பாலின அடையாள குறைபாடுகள் (psychosexual and gender identity disorders) என்ற தலைப்பிற்குப் பதிலாக, மனித பாலியல்சார்(Human Sexuality), பாலின முரண்பாடு, பாலின மன உளைச்சல், பாலின அடையாளங்களுடன் ஒத்துப் போகாதவர் (gender non-conformity),  இடைப்பால் (Intersex), பாலியல் வழிபிறழ்தல் (Paraphilia Disorder) என்று மாற்ற பரிந்துரைத்துள்ளது.

    இதையும் வாசிக்க: சென்னை ஐஐடியில் சேர விருப்பமா? askiitm இணையதளம் உங்களுக்குத் தான்

    இந்த பரிந்துரையை, அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: LGBT, MBBS

    அடுத்த செய்தி