முகப்பு /செய்தி /கல்வி / சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எம்.இ பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் எம்.இ பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  முதுநிலை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டில் உள்ள தொழிநுட்ப ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில் செயல்படும் இந்த நிறுவனம் ஆசிரியர் பயிற்சி அளித்து வருகிறது.தொழிற்துறை மேம்பாட்டு திட்டம் (Professional development Programe), சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு பயிற்சித் திட்டம் (Overseas Training Programe), முதுநிலை பொறியியல் பாடத்திட்டம் (PG Courses), ஆராய்ச்சி படிப்பு (Research Programe) ஆகிய நான்கு தொகுப்பின் கீழ் ஆசிரியர் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2022 கல்வியாண்டிற்கான முதுநிலை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இதன் கீழ், M.E (Multimedia Technology), ME (Energy Technology), ME (Infrastructure Engineering and Management), ME (ECE - Industry Integrated) ஆகிய 3 வகையான படிப்புகளில்  மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கTANCET : முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு

2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் படி, 10% இடங்கள் பொது பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு (GEN-EWS) ஒதுக்கப்பட்டுள்ளது. 15% இடங்கள் பட்டியல் பரிவனருக்கும் (SC), 7.5% பட்டியல் பழங்குடியினருக்கும் (51) மற்றும் 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC-NCL) ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், தெளிவுரை வேண்டுவோர் https://www.nitttrc.ac.in/index.php என்ற  இணைய பக்கத்தை அணுகலாம். director@nitttrc.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044 22545405 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்: 

தொழில்நுட்ப ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்பித்தல் உத்திகளை வடிவமைப்பது, தேர்வு முறையை சீர்திருத்துவது, தொலைதூரக் கல்வியை கட்டமைப்பது, ஆசிரியர் திறன்களை ஆராய்வது போன்ற முக்கிய கல்வி சேவைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  சென்னை, சண்டிகர், கொல்கத்தா, போபால் ஆகிய நான்கு நகரங்களில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம்  ஆகிய தென்மாநிலங்களின் கல்வி சேவைகளை  சென்னை நிறுவனம் ஒருங்கிணைக்கிறது.

First published:

Tags: College Admission, Engineering student