ஹோம் /நியூஸ் /கல்வி /

Education Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன

Education Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன

எம்சிஏ படிக்கும் மாணவர்களில் 70% பேர் எந்தவொரு பணியில் அமர்த்தப்பட முடியாத சூழலில் உள்ளனர்.

எம்சிஏ படிக்கும் மாணவர்களில் 70% பேர் எந்தவொரு பணியில் அமர்த்தப்பட முடியாத சூழலில் உள்ளனர்.

எம்சிஏ படிக்கும் மாணவர்களில் 70% பேர் எந்தவொரு பணியில் அமர்த்தப்பட முடியாத சூழலில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் ஆண்டுதோறும் 80 முதல் 90 லட்சம் பட்டதாரிகள் கல்லூரி படிப்பை முடிக்கின்றனர். இதில், குறைந்தது 50-60 லட்சம் பேர் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. படித்தவர்களுக்கான வேலையின்மை என்ற சிக்கலான பிரச்சனையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் சந்தித்து வருகின்றன என்பதை முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.

நாட்டில் 95% என்ஜினியர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை கோடிங் பிரிவில் சேர தகுதியற்றவர்களாக உள்ளனர் என 2018ல் வெளியிட்ட McKinsey ஆய்வறிக்கை கூறுகிறது. மீதமுள்ளவர்களில் 2%க்கும் குறைவானவர்கள் மட்டுமே திறன்பட கோடிங் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சந்தையில் நிலவும் திறன் இடைவெளியை நிரப்ப வேண்டிய சூழல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது எழுந்து உள்ளது. எந்த பாடநெறிகள் தற்போது அதிக அளவில்  வேலைவாய்ப்புகளை உருவாக்கம் செய்கின்றன? தொழித்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன? மாணவர்கள் மேம்படுத்த வேண்டிய திறன்கள் என்ன? என்பதனை கீழே காண்போம்.

இந்தியாவின் உயர்கல்வி போக்கு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம்,    திறன் இடைவெளி  உள்ளிட்ட தகவலைகளை ஒவ்வொரு ஆண்டும் 'திறன் இந்தியா' என்ற தலைப்பில் Wheebox என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு (CII),ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP), அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE), இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (AIU) உள்ளிட்டவைகளும்  இந்த அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

Education Series 1: பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?

2022 திறன் இந்தியஅறிக்கையின் படி, நாட்டின் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் (Employability) 46% ஆக உள்ளது. அதாவது, இரண்டில் ஒரு பட்டாதாரிகள் போதிய கல்வித் தேர்ச்சியைக் கொண்டிருந்தாலும், எந்தவொரு பணியில் அமர்த்தப்பட முடியாத சூழலில் உள்ளனர்.

ஆண்டுவேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள்
201638.12%
201740.44%
201845.60%
201947.38%
202046.21%
202145.9%
202246.2%

பாடநெறிகளைப் பொறுத்த வரையில், பிஇ.,பி.டெக், எம்பிஏ முதுநிலை படிப்பு, இளநிலை கலை  படிப்புகள் திறன் வாய்ந்த இளைஞர்களை அதிகளவு பணியமர்த்தி வருகின்றனர். பிஇ., பி.டெக் முடித்த 55.15% இளைஞர்கள் வெற்றிகரமாக பணியமர்த்தப்படுகின்ற்னர். எம்பிஏ முதுநிலை படிப்பு முடித்தவர்களில் 55.09% பேரும் , கலைத்துறையில்  இளநிலை படிப்புகளை முடித்தவர்கள் 44.2% பேரும் பணியமர்த்தப்படுகின்றனர்.   

 

பி. பார்மசி படிக்கும் மாணவர்களில் 44.65% பேரும்,  பாலிடெக்னிக் கல்லூரி பட்டயப்  படிப்புகளை  முடித்தவர்களில் 21.42% பேரும், ஐடிஐ படிப்பை முடித்தவர்களில் 31.3% பேரும் பணியமர்த்தப்படுகின்றனர்.

எம்சிஏ மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான விகிதம் ஐடிஐ மாணவர்களை விட குறைவாக  உள்ளது. அதவாது, எம்சிஏ படிக்கும் மாணவர்களில் 70% பேர் எந்தவொரு பணியில் அமர்த்தப்பட முடியாத சூழலில் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகால தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது, சந்தையில் எம்பிஏ முதுநிலை படிப்புக்கு  நல்ல வரவேற்பு இருப்பது தெரிய வருகிறது.  அதே சமயம், பி.பார்ம், பி. காமர்ஸ், பி.ஏ, பாலிடெக் படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

வேலையளிப்போர்களில் பெரும்பாலானோர், ஆட்சேர்ப்பின் போது நான்கு ஆண்டு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

2022ல் இணைய வணிகம், மென்பொருள், கணினி வன்பொருள்,பார்மா துறைகள் அதிக இளைஞர்களை பணியமறித்தியுள்ளன.

தொழில்நுட்படுத் துறையில் செயற்கை  நுண்ணறிவு, முப்பரிமான அச்சிடுதல் (3D Printing), இணைய தொடர்புகள் ( Internet of Things) , செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவு  மேலாண்மை  போன்ற பாடநெறிகளுக்கான தேவைகள் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

டெக்கினிக்கல் ரைட்டிங் (Technical Writting), நிபுணத்துவம், திட்ட மேலாண்மை (Project Management), இடர் மேலாண்மை (Risk Management), சமூகத் திறன் மேம்பாட்டு போன்ற திறன்களை பி.இ., பி.டெக் பட்டதாரிகள் கொண்டிருப்பது அவர்களின் வேலைவாய்ப்பினை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Education, Government jobs